யார் வேண்டுமானாலும் பதவியில் இருங்கள் ! பிரதமரின் பதிலால் அமைதியானது நாடாளுமன்றம்

யார் வேண்டுமானாலும் பதவியில் இருங்கள் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார்.

அவரின் கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பிரதமர் பதில் அளிக்கையில்,

தூரநோக்குடன் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம். முறையாக தெரிந்து கொள்ளாமல் கருத்து வெளியிட வேண்டாம்.

நாட்டை அபிவிருத்தி செய்வது மட்டுமே எமது நோக்கமாகும், மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் தனிப்பட்டவர்கள் விசாரணை நடத்தவில்லை. நேர்மையான விசாரணைகளே நடைபெறுகின்றது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ளேயும் பிளவு ஏற்பட்டு இரண்டு மூன்று பிரிவுகள் இருக்கின்றது, முதலில் அதனை சரி செய்து கொள்ளுங்கள்.

அதேபோன்று கடந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த மிகப்பெரிய கடன் தொகையினால் அவற்றினை நிவர்த்தி செய்து நாட்டை முன்னேற்ற வேண்டிய கடமை எமக்கு உண்டு.

சீனாவா? இந்தியாவா? முக்கியம் என நாங்கள் முடிவு செய்யவில்லை, யார் மூலம் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியும் என்பது பற்றி மட்டுமே நாம் சிந்தித்து செயற்படுகின்றோம்.

இப்போது அமெரிக்கா அதிபர் மாறிவிட்டார், முன்னர் அமெரிக்கா கூறியவை தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விடலாம் இது போன்று பல மாற்றங்கள் ஏற்படும்.

இவை அனைத்தையும் தாண்டி நாம் அபிவிருத்தி பாதையில் செல்ல வேண்டிது மட்டுமே முக்கியம். வீணாக குழப்பங்களை ஏற்படுத்த எவரும் முயல வேண்டாம் எனவும் பிரதமர் அதிரடியாக கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாராளுமன்றத்தில் சபையை குழப்பும் விதமாக கருத்து வெளியிட்டு வந்த கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமரின் இந்த பதில்களைத் தொடர்ந்து அமைதியாக இருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.