காதலை கண்டித்த பெற்றோர்: மாணவி எடுத்த விபரீத முடிவு!

தமிழ்நாட்டில் பெற்றோர் காதலை கண்டித்ததால் மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் வினிதா. இவர் பிளஸ் டூ படித்து வருகிறார்.

இந்த நிலையில் வினிதாவின் காதல் விவகாரம் தெரிந்து அவரது பெற்றோர் வினிதாவை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17ம் திகதி தண்ணீர் எடுக்கச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் வினிதாவைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், மாணவி வினிதா இழுப்பக்கோட்டை கிராமத்தில் விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வினிதாவின் மரணம் கொலையா, தற்கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.