குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.ஆனால் மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத காரணத்தால், விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் கவலையடைந்தனர்.
தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
பிற மாவட்டங்களில் லேசான மலை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையில் மழை பெய்ய தற்போது வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.







