சிசுவை கொன்ற 500 ரூபாய்: மீண்டும் ஒரு சோக சம்பவம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால், இந்தியாவின் சில இடங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில், மும்பையில் செல்லாத 50 ரூபாய் நோட்டை மருத்துவமனை வாங்க மறுத்த காரணத்தால் பிறந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில், பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து ஸ்கேன் எடுக்காததால் சிசு உயிரிழந்த பரிதாப சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

ரஞ்சன்சிங் என்பவர் கடுமையான வயிற்று வலியால் துடித்த தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அல்ட்ரா ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

அவரது பரிந்துரையின்பேரின் அல்டாரா ஸ்கேன் சென்டருக்கு சென்ற ரஞ்சன் மனைவிக்கு ஸ்கேன் எடுக்க கட்டணமாக 500, 1000 ரூபாய் பழைய நோட்டுக்களை கொடுத்துள்ளார்.

அதனை அவர்கள் வாங்க மறுத்து ஸ்கேன் எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் சிசு இறந்துவிட்டது.

தற்போது, அந்த தம்பதியினர் குழந்தையை இழந்து தவிக்கின்றனர். மேலும், பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்ததால் சிசு இறந்த பின்னர் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட இரத்தப் போக்கினை கட்டுப்படுத்த ஊசி மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமல் ரஞ்சன் தவித்துள்ளார்.

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.