இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?

கற்பூரம் என்பது ஆரத்தி எடுக்க, கடவுளை வணங்கும் போது மட்டும் பயன்படுத்தப்படும் ஆன்மீக பொருளாக மட்டும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் இதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம். அதற்கென கற்பூரத்தை சாப்பிட வேண்டுமா என கேட்க வேண்டாம்.

இது சாப்பிட உகந்ததல்ல. இதன் வாசனை சுவாசத்தின் மூலம் நன்மை அளிக்கவல்லது. சிலருக்கு இது நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம். அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிறில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம். இனி, இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…
இரத்த ஓட்டம்!

இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது கற்பூரம். மேலும், இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

செரிமானம்!

கற்பூரத்தின் தன்மை செரிமானம் சீராகவும் கற்பூரம் உதவுகிறதாம். சளித்தொல்லை! கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது. சளி மட்டுமின்றி சுவாசக் கோளாறுகளுக்கும் நல்ல தீர்வளிக்க கூடியது கற்பூரம்.

நுரையீரல்!

இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது பலரும் அறிந்த பாட்டி வைத்தியம் தான். மேலும், இது வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

கற்பூர எண்ணெய்!

கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால், தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்.