16 வயது மாணவிக்கு, ஹுக்கா, மது! நண்பர்கள் முன்னிலையில் பொறியியல் மாணவர் செய்த கொடூரம்!

தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டம் காட்கேஸார் பகுதியில் போதை மருந்து விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு 16 வயது டிப்ளமோ மாணவி ஒருவரை பொறியியல் மாணவர் ஹரிஷ் என்பவர் அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரை ஹுக்கா எனப்படும் குழாய் வடிவில் போதை ஏற்றும் இயந்திரம் மூலம் சுவாசிக்கச் செய்துள்ளார்.

இதனால் மெய்மறந்த அந்த மாணவிக்கு  மது வகைகளை குடிக்கச் செய்து, பின்னர் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவரது 3 நண்பர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அந்த போதை விடுதியின் உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததையடுத்து, 4 பொறியியல் மாணவர்கள் மற்றும் போதை விடுதியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.