இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்த நபர்கள்: தண்டனை யாருக்கு கிடைத்தது தெரியுமா?

ஐக்கிய அமீரகத்தில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு பொலிசார் பாதிக்கப்பட்ட பெண்ணை சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் நகருக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றுள்ளார்.

ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது பிரித்தானிய நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்களிடம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து ஹொட்டல் அறைக்கு வந்த இருவரும் பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளனர்.

மேலும், பெண் கற்பழிக்கப்பட்டதை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரத்திற்குள் இருவரும் இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமையை பொலிசாரிடம் தெரிவிக்க பெண் காவல் நிலையம் சென்றுள்ளார்.

ஆனால், ‘திருமணம் ஆனவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக’ தற்போது அப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், பெண் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என அவரிடம் இருந்த கடவுச்சீட்டையும் பொலிசார் பறித்துள்ளனர்.

கற்பழிப்பு புகார் தெரிவிக்க சென்று தன்னை பொலிசார் கைது செய்துள்ள சம்பவத்தால் அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஐக்கிய அமீரக சட்டப்படி, திருமணமான ஆண் மற்றும் பெண் தன்னுடைய துணையை தவிர்த்து மற்ற யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

அதேபோல், திருமணம் ஆகாத ஒரு ஆண் அல்லது பெண் திருமணமான ஆண் அல்லது பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.