என்றென்றும் இளமைக்கு கழுதையின் ஜெலட்டின்!

சீனாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் மிக முக்கியமாக கழுதையின் ஜெலட்டின் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என பல நாடுகளில் இருந்து கழுதைகள் கொல்லப்பட்டு அதன் தோல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கழுதையின் தோலில் மனிதர்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதால், குறைந்த விலையில் விற்பனை ஆகி வந்த கழுதையின் விலை இன்று ஆயிரக்கணக்காக உயர்ந்து வருகிறது.

கழுதை தோலின் ஜெலட்டினால் தயாரிக்கப்படும் இந்த மருந்தானது, சாதாரண சளித் தொல்லையில் இருந்து, தூக்கமின்மை, ஆண்மைக் குறைபாடு போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வாகவும், நமது இளமையின் வாழ்நாட்களை நீட்டிக்கச் செய்வதிலும் சிறந்த மருந்தாக உள்ளது என்று நம்பப்படுகிறது.

சீனா நாட்டின் மருத்துவத்தில், கழுதை தோலின் ஜெலட்டினை வைத்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை முதன் முதலில் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் பயன்படுத்தி வந்தார்கள்,

ஆனால் தற்போது சாதாரண மக்களும் இந்த மருந்துக்களை பயன்படுத்தி வருவதால், இதனுடைய விலை இன்னும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கழுதை இனமே அழிந்து போகும் சூழலும் உருவாகி உள்ளது.