சீனாவில் வைரலாகும் டிரம்பின் பேத்தி பாடிய சீன மொழி பாடல்!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் டொனால்டு டிரம்பின் பேத்தி பாடிய சீன மொழி பாடல் ஒன்று அந்த நாட்டில் தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் தெரிவாகியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் டிரம்பின் பேத்தி பாடியுள்ள சீன மொழி பாடல் ஒன்று அந்த நாட்டில் தற்போது வைரலாகி வருகிறது.

டிரம்பின் மகளான இவங்கா டிரம்புக்கு Arabella Kushner என்ற 5 வயது மகள் உள்ளார். இவர்தான் குறித்த பாடலை பாடி சீன மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார்.

Arabella Kushner பாடிய அந்த பாடலில் சீன மொழியை கனகச்சிதமாக அவர் உச்சரித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் சீனர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் சிறுமி Arabella Kushner பாடியுள்ள இந்த பாடலை டிரம்ப் வெற்றி பெற்றதன் பின்னர் இவங்கா டிரம்ப் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சீனாவின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு குறித்த பாடலை மிகவும் இனிமையாக பாடியுள்ளதாக சீனர்கள் பாராட்டி வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் சீனாவை கடுமையாக சாடியிருந்தார். மட்டுமின்றி அமெரிக்க பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் சீனா களம் கண்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.