அதே வெறி..! அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்த்த தென்ஆப்பிரிக்கா

ஹோபர்ட்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

2வது இன்னிங்சில் அவுஸ்திரேலியா கடைசி 7 விக்கெட்டுகளை 32 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது மிகவும் பரிதாபமான விடயமாகும்.

இந்த டெஸ்டை பொறுத்தவரை 3 நாட்களிலே முடிவு தெரிந்து விட்டது. 2வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

நாளைய கடைசிநாள் ஆட்டத்துக்கு கூட செல்லாமல் அவுஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணியிடம் சரண்டர் ஆகி விட்டது.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2014ம் ஆண்டு தன்னுடைய சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு தற்போது சரியான பதிலடி கொடுத்தது.

இவ்விரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24ம் திகதி அடிலெய்டில் நடக்கிறது.