மாறப்போகும் நிலவு..! பூமியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்

பூமியில் 69 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றவுள்ள நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையவுள்ளது.

1948க்கு பிறகு இந்த வாரம் நிலவு அதன் பாதையை விட்டு பூமிக்கு அருகே வருவதால் பூமியில் அது மிக பிரகாசமாக தோன்றவுள்ளது.

இதன் போது நிலவின் விட்டம் 14 சதவீதமும், அதன் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மூன் என்றழைக்கப்படும் இந்த நிகழ்வு திங்கள் அதிகாலையில் அமெரிக்காவில் அதிக பிரகாசத்துடன் தோன்றுகிறது. திங்கள் அன்று ஆசிய மற்றும் தெற்கு பிசிபிக்கில் அதன் உச்சநிலையை அடைகிறது.

நியூசிலாந்தின் உள்ளுர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவு பிரகாகமாக தோன்றவுள்ளது.

இதனையடுத்து, இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகே மறுபடியும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.