மீண்டும் ஒன்றிணையும் மைத்திரி – மஹிந்த! அதிர்ச்சியில் ரணில்

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு பிரிவினருக்கும் இடையில் மோதல் நிலைமை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து ஒரு கட்சியாக எதிர்வரும் காலங்களில் செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணக்கப்பாட்டில் குழுவொன்று நியமிக்கப்பட்டுளள்து.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் குழுவை நியமிக்கவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய அரசாங்க தரப்பில் அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர், சுசில் பிரேமஜயந்த, WDJ செனவிரத்ன ஆகிய அமைச்சர்களின் தலைமைத்துவத்தில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் நியமிக்கப்படுகின்ற குழு தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை பிளவுபட்டுள்ள இரு தரப்பினரும் ஒன்றிணைந்தால், ஐக்கிய தேசிய கட்சி பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.