இன்றைய ராசி பலன் 13-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளை கள் பிடிவாதமாக இருப்பார் கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். போராடி வெல்லும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நெருங்கி யவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். மதிப்புக் கூடும் நாள்.

  • கடகம்

    கடகம்: கோபத்தை கட்டுப்ப டுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மகிழ்ச்சி யான நாள்.

  • கன்னி

    கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத் தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங் குவீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.

  • தனுசு

    தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்:  தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.