பாரிய நெருக்கடியில் அரசாங்கம்! தக்க தருணத்தில் அழுத்தம் கொடுக்கும் அமைச்சர்கள்

இலங்கை மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தில் மந்தமான நிலை காணப்படுகிறது.

இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தீர்மானமிக்க ஆபத்திற்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறி மோசடி தொடர்பில் கோப் அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரையை கருத்திற்கு கொண்டு அதன் மோசடி கொடுக்கல் வாங்கல்களுக்கு தொடர்புடைய நபர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரபலங்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் நடத்தியுள்ளனர்.

இந்த மோசடிக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய நபர்களுக்கு தண்டனை வழங்குவதுடன், அவர்களினால் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திற்குள் உள்ள முறி மோசடிக்கு எதிரப்பு வெளியிடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கல் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, முறி மோசடி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவருமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி முறி தொடர்பிலான விசாரணைகளில் அனைத்து அரசியல்வாதிகளும் தலையிடாமல் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த மோசடி தொடர்பில் ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள மேலதிக செயற்பாடு 2017ஆம் ஆண்டு வரவு செலவு வாக்களிப்பின் போது தீர்மானமிக்க அழுத்தம் ஒன்று பிரயோகிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.