வீடியோ அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கபட்ட டொனால்டு பாகிஸ்தானியர்? பீதியை கிளப்பும் தொலைகாட்சி

அமெரிக்க அதிபராக தெர்வு  செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று பாகிஸ்தானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப் எங்கள் நாட்டை சேர்ந்தவர் என்றும், ஒரு கதை கட்டி வருகிறது அந்த செய்தி நிறுவனம்.

இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான்.

1954ம் ஆண்டு வஸ்ரிஸ்தான் என்ற இடத்தில் பிறந்த இவர், தனது பெற்றோர்களை ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்தார். இதன் பிறகு பிரிட்டிஷ் இந்திய ராணுவ கேப்டன் தாவூத்தை லண்டனுக்கு கூட்டிச் சென்றுவிட்டார்.

கடைசியாக 1955ம் ஆண்டு டிரம்ப் அவரது குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அவர் அந்த நாட்டின் அதிபராகவவே  மாறிவிட்டார் என்று கூறியுள்ளது.அதுமட்டுமல்லாது அவர் சிறு வயதில் இப்படி தான் இருந்தார் என்று ஒரு புகைப்படத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் செய்தி நிறுவனத்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.