தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முட்டை ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஒரு குழந்தை மிக ஆரோக்கியமக வளர முடியும்.

ஆனால் இன்று கிடைக்கும் பிராய்லர் முட்டைகள் கெடுதலை தரும். பல பக்க விளைவுகளை தரும். ஆகவே நாட்டு கோழி முட்டையை தெர்ந்தெடுத்து வாங்குங்கள்.

எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள முட்டை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என பார்க்கலாம்.

முட்டையிலுள்ள சத்துக்கள் :
வேக வைத்த முட்டையில் அதிக புரதம் விட்டமின் ஏ, பி, டி, ஈ, கே மற்றும் இரும்பு, செலெனியம் போன்ற மிக முக்கியமான சத்துக்கள் கொண்டுள்ளது. இவை அனைத்து சத்துக்களும் புற்று நோயை நெருங்க விடாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான வடிவம் :
சிறு வயதிலிருந்து முட்டை சாப்பிட்டு வந்தால் முழுமையான வளர்ச்சி பெற முடியும். எலும்புகள் பலப்பெறும். இதில் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் :
வயதாவதற்கும் பல வியாதிகளுக்கும் முக்கிய காரணம் செல் பாதிப்படைவதுதான். செல்களை பாதிப்படையச் செய்வது ஃப்ரீ ரேடிகல்ஸ்தான். இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை முற்றிலும் முட்டை அழிக்கிறது.

எலும்பு நகம் பலம் பெற :
ஆரோக்கியமான கூந்தல் மற்றும் நகங்கள் வளர முட்டை உதவி புரிகிறது. அதே போல் ஆஸ்டியோஃபோரோஸிஸ் வருவதையும் தடுக்கிறது. ஆரோக்கியமன எலும்புகளை பெற முடியும். வயதான பின் வரும் எலும்பு தேய்மானம் தடுக்கப் பரும்

மூளையை வலுப்படுத்தும் :
அறிவை தூண்டும்படியாக மூளையை பலப்படுத்தும். அதனால்தான் பள்ளிகளில் தினம் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கு தகவல் பரிமாற்றம் அளிக்க தேவையான முக்கிய காரணி கொலைன் என்ற பி காம்ப்ளக்ஸ் விட்டமின். அது அதிகம் முட்டையில் உள்ளது.

கெட்ட கொழுப்பை குறைக்கும் :
முட்டையில் அதிக கொழுப்பு உள்ளது. அதனால் சாப்பிடக் கூடாது என பலரும் சொல்லிக் கேள்விப்படுவதுண்டு. ஆனால் முட்டையில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. அவையும் நல்ல கொழுப்பே. இது கெட்ட கொழுப்பை கரைத்து உடல் பருமனை குறைக்கும்.