போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஆவா குழு சந்தேகநபர்!

ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபரை அழைத்துச் சென்ற போது, தப்பிக்க முயற்சித்து பொலிஸ் கான்ஸ்டபிளை இளைஞர் கடித்துள்ளார்.  இதன் போதுகாயப்பட்ட கான்ஸ்டபிள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், இளைஞரை இன்று வெள்ளிக்கிழமை (11) யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.