ட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்காக இந்தியர் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

லக்னோ ஐஐஎம்-மில் எம்பிஏ படித்தவர் அவினாஷ். இவர் அரசியல் பிரபலங்களின் சமூகவலைதள செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை நிர்வகிப்பதில் திறமை பெற்றவர்.

அரசியல் மீதான ஆர்வத்தினால் முன்னணி தொழில்நுட்ப நிறுவன வேலையை உதறிய அவர், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் பரப்புரையில் இணைந்தார்.

இவரது மனைவி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது விடுமுறையைக் கழிக்க கடந்த 2014-ல் அவினாஷ் அமெரிக்க சென்றார்.

அப்போது அந்த மாகாணத்துக்கு தேர்தல் வர இருந்த சூழலில், தேர்தல் குறித்த ஆய்வினை அவினாஷ் மேற்கொண்டார். அவரது ஆய்வு முடிவுகளின்படியெ குடியரசுக்கட்சியின் டக் டூசி, அம்மாகாண ஆளுநர் தேர்வில் வென்றார்.

இதனால், குடியரசுக்கட்சி அரசியல் பிரபலங்களிடம் நன்மதிப்பைப் பெற்ற அவினாஷ், அரிசோனா மாகாணத்தில் ட்ரம்ப்பின் வெற்றிக்கான உத்தியை வகுக்கும் குழுவில் இடம் பெற்றார்.

அவரது பரப்புரை உத்திகளின்படி செயல்பட்ட ட்ரம்ப், அரிசோனா மாகாணத்தில் 47 தேர்வாளர் வாக்குகளை வென்றதோடு, அதிபர் தேர்தலிலும் வென்றார்.

ட்ரம்பை நேரில் சந்தித்துள்ளதாகக் கூறும் அவினாஷ், அவர் பழகுவதற்கு இனிமையான மனிதர் என்கிறார். மேலும், தான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதையும் ட்ரம்ப் அறிவார் என்றும் கூறுகிறார் அவினாஷ்.