டொனால்ட் ட்ரம்ப்பால் வெடிக்கப் போகிறது 3ஆம் உலகப்போர் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பால் பீதி

லண்டன் :3 ஆம் உலகப்போர் மூளும் என்ற நாஸ்ட்ரடாமஸின் கணிப்பால் மக்கள் பீதி அடைந்துள்ளார்.

அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரால் தான் மூன்றாம் உலகப்போர் மூளும் என்ற நாஸ்ட்ரடாமசின் கணிப்பு தற்போது தீயாக பரவி வருகிறது.

உலக அளவில் புகழ்பெற்றவை நாஸ்ட்ரடமஸின் கணிப்புகள். காரணம் அவரது கணிப்புகள் அனைத்தும் நடந்துள்ளது.

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்தவஞானி நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.

அவரது கணிப்புகள் குழப்பமும் சர்ச்சையும் நிறைந்தவையாக இருந்தாலும் கூட இன்றலும் அவரது கணிப்புகள் குறித்து அறிய மக்கள் பேரார்வத்துடன் உள்ளனர்.

கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியன் வீழ்ச்சி, இரட்டை கோபுர தாக்குதல், சுனாமி, என

பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்தவர் நாஸ்ட்ரடாமஸ்.

மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார், என்பதை 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் கணித்து கூறியதாக தகவல் வெளியானது. அது உண்மையாகவும் இருந்தது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என முன்கூட்டியே கணித்துள்ள நாஸ்ட்ரடாமஸ், அவரின் தலையிமையில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என கணித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் ஈராக் போர் தான் அழிவுக்கு முதல்படி என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். அதற்கேற்றார் போல் தற்போது ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஈராக் ராணுவமும் அமெரிக்க கூட்டுப்படைகளும் சண்டையிட்டு வருகின்றன.

இதுவரை நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் பலித்துள்ளதால் மூன்றாம் உலகப்போர் குறித்த அவரது இந்த கணிப்பும் பலித்து விடுமா என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் 2016ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்கள், கடல் கொந்தளிப்புகள் மழை, வெள்ளம் என பேரழிவுகள் அதிகமாக இருக்கும், தீவிரவாதம் தலைதூக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் என்றும் அவை உலகை அழிவு நோக்கி அழைத்து செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.