பெண்ணை கற்பழிக்க முயன்று ஆணுறுப்பை இழந்த ஆண்? | ஆன்டி – ரேப் டிவைஸ்!

உலகம் முழுவதும் பெண்கள் நலன் விரும்பும் ஆண்களும், தங்கள் பாலில் யாரும் இனி கற்பழிக்கப்பட கூடாது என பல பெண்களும் பல வகையிலான ஆன்டி – ரேப் டிவைஸ்களை மாதிரி தயாரித்துள்ளனர். ஆனால், அவை யாவும் பெரியளவில் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை.

கற்பழிப்பை தடுக்க டிவைஸ் அணிந்துக் கொள்ள வேண்டும் என்றால் பெண்களுக்கு எதிராக நாம் நிகழ்த்தும் மிகப்பெரிய வன்கொடுமை இதுவாக தான் இருக்கும். ஆன்டி – ரேப் டிவைஸ் அணிந்த பெண்ணை கற்பழிக்க முயன்று ஆணுறுப்பை ஆண் ஒருவர் இழந்தார் என்ற செய்தி உலகளவில் இன்டர்நெட்டில் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது.

ஆன்டி – ரேப் டிவைஸ்!

ஆன்டி – ரேப் டிவைஸ் என்பது பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தங்கள் பிறப்புறுப்பில் மாட்டிக்கொள்ளும் ஒரு டிவைஸ் ஆகும். இது வெளிப்புறத்தில் ஆணுறை போன்ற தொற்றமளித்தளும், உட்புறத்தில் முற்கள் போன்ற வடிவமைக்கு இருக்கும். ஒரு ஆண் இந்த டிவைஸை மாட்டியிருக்கும் பெண்ணை கற்பழிக்க முயன்றால் அந்த ஆணின் ஆணுறுப்பு கண்டிப்பாக காயங்கள் அல்லது சேதமடையும்.

ஆணுறுப்பை இழந்த ஆண்?

நியூயார்க் நகரின் காம இச்சை வெறி பிடித்த ஆண் ஒருவர் பெண்ணை கற்பழிக்க முயன்றதாகவும். அந்த பெண் ஆன்டி – ரேப் டிவைஸ் அணிந்திருந்ததால் அவரது ஆணுறுப்பு துண்டித்து போனதாகவும் கடந்த ஒருசில மாதங்களாக ஒரு செய்து இன்டர்நெட்டில் பரவி வருகிறது.

நன்றி!

இந்த செய்தி அறிந்து பலரும் ஆன்டி – ரேப் டிவைஸ் வடிவமைத்த நபருக்கு நன்றி. இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. மேலும், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்றும், ஆண்களிடம் இருந்து கற்பை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது, கற்பழிப்பு சம்பவத்தில் இருந்து தப்பிக்கு பயனளிக்கிறது எனவும் பல பதிவுகள் சமூக தளங்களில் இந்த செய்துயோடு இணைத்து பகிரப்பட்டன.

நடந்ததாக கூறப்படும் சம்பவம் என்ன?

மிச்சேல் கிங்க்ஸ்டன் எனும் பெண் ஒரு ஞாயிறு அன்று மதியம் சாலையில் நடந்து செண்டிருந்ததாகவும், அப்போது இச்சை வெறி பிடித்த ஒரு ஆண் அவரை வழிமறித்து, அவரை கீழே தள்ளி கற்பழிக்க முயன்றதாகும் கூறப்படுகிறது.

மிச்சேல் ஆன்டி – ரேப் டிவைஸ் அணிந்திருந்தது அறியாத அந்த ஆண் கற்பழிக்க முயன்றதாகவும், அந்த சமயத்தில் அவரது ஆணுறுப்பு ஆன்டி – ரேப் டிவைஸ்-ல் மாட்டி துண்டித்து போனதாகவும் மிச்சேல் கூறியதாக செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெய்யா? பொய்யா?

ஆனால், இது போன்ற சம்பவம் இன்று நடக்கவில்லை என்றும், இது கிளப்பிவிடப்பட்ட வெறும் புரளி என்றும் அறியப்படுகிறது. மேலும், இன்றுவரையிலும் ஆன்டி – ரேப் டிவைஸ் முழுமையாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இதுபோன்ற டிவைஸ் பெண்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வந்தால் அது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். மேலும், ஆன்டி – ரேப் டிவைஸ் ஆணுறுப்பில் காயங்கள் ஏற்படுத்துமே தவிர முழுவதும் துண்டித்து போக செய்யாது எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்னர்