டெல்லியில் 15வயது சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி பஹர்கன்ஜ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரேஹன் என்ற 15 வயது சிறுமி தனது காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த அந்த பெண், முதலில் தனது காதலன் மட்டும் கற்பழித்ததாக தெரிவித்தார், பிறகு அவருடன் சேர்ந்து 2 பேர் தன்னை கற்பழித்ததாக கூறினார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் தன் காதலன் சினிமாவிற்கு அழைத்து செல்வதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்றான் என்றும் , அங்கு அவனது நண்பர்கள் தனக்கு கூல் டிரிங்ஸில் மயக்க மாத்திரை கலந்துகொடுத்தாகவும் தெரிவித்தார்.
காதலனோடு சேர்த்து மொத்தம் 7 பேர் அந்த அறையில் இருந்ததாகவும், ஒருவர் மாறி ஒருவர் தன்னை கற்பழித்ததாகவும் அவர் கூறினார்.புகாரை ஏற்று கொண்ட போலீஸார், மூன்று பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.