உடற்பயிற்சி செய்தால் உடல் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். உடற்பயிற்சியை ஒருவர் செய்வதை நிறுத்தினால், அதனால் உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்து, கொழுப்புக்கள் தேங்கி உடல் பருமனடையும் என்பதும் அறிந்த விஷயம் தான்.
ஆனால், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால், மூளை பாதிக்கப்படும் என்பது தெரியுமா? இங்கு உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் மூளை எப்படி பாதிக்கப்படும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
மன அழுத்தம்
உடற்பயிற்சி செய்யும் போது மனநிலை மேம்படுத்தப்படும் மற்றும் உடற்பயிற்சி மன அழுத்தத்தால் ஏற்படும் மன இறுக்கத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது, மனநிலையை மேம்படுத்தும் செயல் இல்லாமல், அதனால் மனம் ஒருவித பாரத்துடன் இருக்கும்.
ஞாபக சக்தி குறையும்
மேரிலாண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது மூளைக்கு பாயும் இரத்த ஓட்டம், குறிப்பாக ஞாபக சக்திக்கு காரணமான மூளைப் பின்புற மேடுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் செல்வது தடைப்பட்டு, நினைவுத் திறன் குறைபாடு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
மனதை ஒருமுகப்படுத்துவது
அளவான உடற்பயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது, அதனால் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.
புத்திக்கூர்மை
பின்லாந்து பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் போது புத்திக்கூர்மை குறைவது தெரிய வந்துள்ளது.
குறிப்பு உடற்பயிற்சி உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே தினமும் தவறாமல் குறைந்தது 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்து, உடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, நோய் நொடியின்றி வாழுங்கள்.