டொனால்ட் ட்ரம்பிற்கு ஒபாமா அழைப்பு: வெள்ளை மாளிகையில் நேரடி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்ட் ட்ரம்பிற்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார அதிகாரியான Kellyanne Conway என்பவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை ஒபாமா தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு, கூட்டம் முடிந்த நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு டிரம்ப் ஒபாமாவை தொடர்புக்கொண்டு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இருவருக்கும் நடந்த உரையாடல் ஆரோக்கியமானதாகவும், சிறப்பாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்ட் டிரம்பிற்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாகவும், அலுவலகத்தில் ஒபாமா நேரடியாக டொனால்ட் ட்ரம்பிற்கு பாராட்டுக்களை தெரிவிப்பார் என Kellyanne Conway தெரிவித்துள்ளார்.