அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது நல்ல விடயம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
டொனல்ட் ட்ரம்ப் தேசியத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்தார். உலக சமாதானத்திற்கு அவரின் வெற்றி சிறந்ததாக அமையும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய தலைமைத்துவம் ஏனைய நாடுகளின் விடயத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







