வட மாகாண சபையில் ஒதுக்கீட்டு நிதியில் 50 வீதம் செலவிடப்பட்டுள்ளது! முதல்வர்

வட மாகாண சபைக்கு 2016ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதம்செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிகாரிகளால் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல் சரியானது தானா? எனஎதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

வட மாகாண சபையின் 65வது அமர்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது 2016ம் ஆண்டுக்கானமூலதன நிதியில் கடந்த 31.08.2016 வரை சுமார் 38 வீதமான நிதியேசெலவிடப்பட்டுள்ளதாக நிதிக்கூற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அதற்கான பௌதீக முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா முதலமைச்சரிடம் கோரினார்.

இதன்போதே 50 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.பௌதீகமுன்னேற்றம் 70 வீதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் தவராசா, உங்களுக்கு அதிகாரிகள்வழங்கிய தகவல் சரியானதா? எனக் கேட்டார். தனக்கு அந்தத் தகவல்களில் சந்தேகம்இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, செப்டெம்பர் 30ம் திகதி வரையான நிதிக்கூற்றறிக்கையின் பிரகாரம் 43வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாகாண சபை இணையத் தள நிதி முன்னேற்ற அறிக்கையில்அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.