ஒரே ஒரு அறிவிப்பால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மோடி

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் சில மணிநேரங்களில் விடை கிடைத்து விடும்.

நேற்று பரபரப்பாக அமெரிக்காவில் தேர்தல் நடந்து கொண்டிருந்த வேளையில், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் பிரதமர் மோடி.

ஹிலாரி- டிரம்ப் என பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், பணத்தை எங்கே மாற்றுவது என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.

மோடியின் இந்த திடீர் அறிவிப்பு ஏன் என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போதே, டிரம்ப் அமெரிக்காவின் சிறந்த நண்பன் இந்தியா என்றும், மோடியுடன் சேர்ந்து செயல்பட தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மிக முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த ரசிகன் நான் எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை இன்று முடிவுகள் வெளியாகும் போது அமெரிக்கா டொலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும் பட்சத்தில், டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.

எதுவாக இருப்பினும் கருப்பு பணம் ஒழிந்தால் இந்திய மக்களுக்கு நன்மை தானே!!!