அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அதன்படி தற்போது குடியரசுக்கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்பே முன்னிலை வகிக்கின்றார்.
அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சற்று முன்னர் வெளியான முதற்கட்ட முடிவுகளின்படி, கென்டகி, இன்டியானா மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
வோமன்ட் மாநிலத்தில் கிளாரி கிளின்டன் முன்னிலை வகிக்கின்றார்.
இதுவரையில் அறிவிக்கப்பட்ட முதற்கட்ட முடிவுகளின் படி டொனால்ட் ட்ரம்ப் 19 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் (62 வீதம்) , ஹிலாரி கிளின்டன் 3 வாக்குகளையும் ( 32 வீதம்) பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.