இந்த அரசாங்கமும் ஏமாற்றுகிறது!

கல்விக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கும் நிதியை பாரியளவில் அரசாங்கம் குறைத்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வரவு செலவு திட்டத்தை விட இம்முளை வரவு செலவு திட்டத்தில் 40 வீதத்திற்கும் அதிகமான நிதி அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் கல்விக்காக 6 வீதத்தை ஒதுக்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய போதும் அதனை செய்யாது ஏமாற்றும் வகையிலேயே செயற்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கம் பயங்கரமானது என சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் அந்த சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.