தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை பிரபல வங்கியான பார்க்ளேஸ் என்னும் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட் கார்டில் அச்சடித்து தர முன்வந்துள்ளது. இதனால் பெரும் பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டினை தலைநகராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழர்களின் வரவேற்பை பெற்றுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட நாட்கள் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் பிரபாகரனின் புகைப்படத்தை அச்சிட்டு தருவதாகவும், தங்கள் கார்டுகளில் பிரபாகரனின் புகைப்படத்தை அச்சிட பலர் முன்வந்துள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.