உடும்பு குட்டியின் பரபரப்பான உயிர் போராட்டம்! இணையத்தில் வைரலான வாழ்க்கை பாடம்

போராட்டம் தான் வாழ்க்கை என்பதை விளக்கும் விதமான உடும்புக் குட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிபிசி தொலைக்காட்சியில் Planet Earth என்ற ஆவணப்படத்தின் 2வது சீசனின் முதல் பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒளிபரப்பானது.

இதில் இடம்பெற்ற காட்சிகள் தான் தற்போது இணையத்தில் ’ஹிட்’ அடித்துள்ளது.

அதில், புதிதாக பிறந்த உடும்புக் குட்டி ஒன்று பாம்பு கூட்டத்தில் இருந்து தப்பி தனது கூட்டத்துடன் சேரும் காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உடும்புக் குட்டியின் வீடியோ வாழ்க்கை எவ்வளவு போராட்டம் மிகுந்தது என்பதை காட்டுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.