இன்று அமெரிக்க தேர்தல் – வெற்றி பெற போவது யார்?

அமெரிக்காவின் 58வது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ள இந்த தேர்தலுக்கான இறுதிகட்ட செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஜனநாயக வேட்பாளர் ஹிலரி கிளின்டனுக்கும், குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இறுதியாக வெளியான கருத்துக் கணிப்பு பெறுபேறுகளில் ஹிலரி கிளின்டன் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இருவருக்கும் இடையில் ஒருசில புள்ளிகளே வித்தியாசப்பட்டிருந்தன.

அதேநேரம், இந்த தேர்தலை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுவரையில் 130 பில்லியன் டொலர்கள் சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.