மஹிந்த சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பத்தரமுல்லவில் அமைந்துள்ள அரசியல் இணைப்புக் காரியாலய அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கப் பிரதிநிதிகள், அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், சீன வாழ் இலங்கையர்கள் ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி சந்திக்க உள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளும் பிரதிநிதிகள் பற்றிய விரபங்கள் வெளியிடப்படவில்லை.