படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகி இறந்த மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மெழுகுதிரி கொழுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பதில் துணைவேந்தர் வேல்நம்பி, பதில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சுதாகரன், மாணவ ஆலோசகர் உதயகுமார் கலைப்பீட மாணவ ஒன்றியத் தலைவர் க.ரஜீவன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இவ் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலர் வருகைதந்து அஞ்சலி செலுத்தினர்.