ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது?

இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? குழந்தைகளுக்கு அணிவிக்கலாமா? யார் யார் அணியலாம் என்கிற கேள்வி பலருக்கு எழுகிறது.

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.