புத்தளம் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இயற்கை!

புத்தளம் உட்பட பல பிரதேசங்களுக்கு பெய்த அடை மழை காரணமாக புத்தளம் உப்பு ஏற்றுமதியாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடை மழை காரணமாக உப்பு உற்பத்தி நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாக கைத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனகுத்துவ, சேவன்திவ், மனதில், சோல்டன், பாலவிய உட்பட பல பகுதிகளில் இவ்வாறு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக புத்தளம் உட்பட பல பகுதிகளை நிலவிய கடுமையாக வறட்சியை தொடர்ந்து பெய்த இந்த மழையினால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வறட்சி காரணமாக தங்கள் தொழில் கடந்த காலப்பகுதிகளில் சிறப்பாக காணப்பட்டதாகவும், சிறந்த வருமானம் பெற்றுக் கொண்டதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த மழை காரணமாக தற்போது தங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.