திருமணத்தடை நீக்கும் செவ்வாய்கிழமை பரிகாரம்..!

திருமணம் நடக்கும்போது அனைவருக்கும் சரியாக ஜாதகம் அமைவதில்லை ஒரு சிலருக்கு மட்டுமே சரியாக அமையும். சில பேருக்கு செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் கால தாமதம் ஏற்படக்கூடும்.

அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பூஜைகள் பல வழிகளில் செய்யப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

மேலும், 41 செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு சிவப்பு ஆடை அணிந்து, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்து வரவேண்டும்.

விரதம் பூர்த்தி அடையும் நாளான அன்று 5 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கும் சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, டம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும். இவ்வாறு செய்தால் திருமணம் தடை முற்றிலும் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.