உலகின் முதல் தொலைக்காட்சி எப்படி தொடங்கியது இப்படி தான்?

இன்றைய தொலைக்காட்சித்துறை எவ்வளவோ மாறிவிட்டது. டிவிடி, புளூ ரே, பீடா மேக்ஸ், வீடியோ டேப் என பலவகை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மோதல்கள்.

ஆனால் ஆரம்பத்தில் இரண்டு தொழில் நுட்பங்களுக்கு இடையிலான போட்டியாகவே தொலைக்காட்சித் தொழில்நுட்பம் துவங்கியது.

ஜான் லோகி பேர்டின் தொழில்நுட்பம். மற்றது மார்க்கோனி இஎம்ஐ தொழில்நுட்பம்.

ஆரம்பத்தில் இந்த இரண்டையுமே பிபிசி பயன்படுத்தினாலும் ஜான் லோகி பேர்டின் தொழில்நுட்பம் காலப்போக்கில் காணாமல் போனது.

உலகின் முதலாவது முழுமையான தொலைக்காட்சி சேவையை 1936 ஆம் ஆண்டு பிபிசி தொடங்கியது.