ஆர்டிக் கடலடிப் பகுதியில் எழும் சத்தத்திற்கு காரணம் என்ன?

ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து மர்மமான சத்தம் கேட்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது குறித்து நாட்டின் இராணுவம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த பல மாதங்களாக கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் வித்தியாசமான சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது.

இந்த சத்தத்தால் பெரிய வாய் உடைய திமிங்கலம் மற்றும் சீல் எனப்படும் நீர் நாய்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களை அப்பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு நகர்ந்துள்ளதாக உள்ளூர் மக்களின் கருத்துக்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த பகுதியில் கனேடிய இராணுவ விமானங்கள் தேடுதல் பணிகளை முன்னெடுத்தன.
ஆனால், இது “ஒலி ரீதியான முரண்பாடு” எனத் தெரிவித்த அவர்கள், இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளர்.