படுகொலை செய்யப்பட்ட யாழ். மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்!

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது கலந்துரையாடல் ஒன்றும் குடும்பத்தினறுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கலந்துக்கொண்டுள்ளார்.

 

இதேவேளை, சுலக்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இரா. சம்பந்தன் மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறும் எனவும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.