ஆபாசமாக கைவைத்த நபரை எட்டி மிதித்த இளம்பெண்: வைரலாகும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் காய்கறி சந்தை ஒன்றில் இளம்பெண்ணின் மீது ஆபாசமாக கை வைத்த நபரை காலால் எட்டி மிதித்து வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் உள்ள கிராமப்புற சந்தை ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த வீடியோ காட்சியில் இளம்பெண் ஒருவர் தமது உறவினருடன் பொருட்களை வாங்கும் நோக்கில் பார்வையிட்டு நின்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லும் நபர் ஒருவர் குறித்த இளம் பெண்ணின் மீது ஆபாசமாக கை வைத்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்த அந்த இளம்பெண் உடனடியாக தமது காலை எட்டி அந்த நபர் மீது வீசியுள்ளார். இதில் அந்த நபர் நிலைதடுமாறி குப்புற விழுந்துள்ள காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

குறித்த வீடியோ அங்குள்ள சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி இதுவரை 12 மில்லியன் பயனாளர்கள் குறித்த வீடியோவை கண்டு களித்துள்ளனர்.