முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!!

பல ஆண்டு காலமாக சில சுயநலமிக்க ஆண்களால் குரானில் உள்ள போதனைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இஸ்லாமிய மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் என்ற போர்வையில், அனைவருக்கும் வலியையும் காயத்தையும் கொடுப்பதை தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்வதில்லை.

நாங்கள் தீவிரவாதத்தைப் பற்றியோ அல்லது ஜிகாத்தை பற்றியோ கூறவில்லை. நாங்கள் பேசுவதெல்லாம் பலதார மண முறையைப் பற்றி தான்.

பாலினம் சார்புத் தன்மையா?
பல வருடங்களாக, முஸ்லிம் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக பல்வேறு திருமணங்கள் செய்யும் சடங்கை கடைப்பிடித்து, தங்கள் மனைவிக்கு ஏற்படும் உணர்வு ரீதியான வலியைப் பற்றி அறியாமையோடு இருந்துள்ளார்கள். இந்த சடங்கை அவர்களது பிறப்புரிமையாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆம், நான்கு முறை ஒரு முஸ்லிம் ஆண் திருமணங்கள் செய்து கொள்ளலாம் என குரான் சொல்கிறது; ஆனால் அப்படி அவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஆனால் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே அப்படி செய்து கொள்ளலாம் என்றும் கண்டிப்பாக கூறியுள்ளது.

இது சரியா தவறா?
தன் காவலில் உள்ள பெண்களைப் பல முறை திருமணம் செய்து கொள்ள நபிகளுக்கு அல்லா அனுமதித்ததற்கு குறிப்பிட்ட காரணம் உள்ளது. அது மட்டுமல்லாது, தன் மனைவிகளை சமமாக பாதுகாக்கவோ, அக்கறை காட்டவோ, அன்பை செலுத்தவோ முடியவில்லை என்றால், அவர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லா நபிகளிடம் கூறியுள்ளார். முஸ்லிம் ஆண்கள் ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆதரவற்றகளுக்கு உதவிட
போரில் இறந்த ஆணின் மனைவியை அல்லது மிகவும் வறுமையில் வாடும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது அப்பெண்களை ஆபத்தில் இருந்து உதவவும், பாதுகாக்கவும் கூறப்பட்டது.

வாரிசு இல்லாத பட்சத்தில்
தன் முதல் மனைவி மூலம் தன் சந்ததிக்கு வாரிசை பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஒரு முஸ்லிம் ஆண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறான். ஆனால் இரண்டு மனைவிகளையும் சமமாகவும், நியாயத்துடனும் நடத்த வேண்டும்.

விபச்சாரத்தை தவிர்க்க
குரானின் படி, “அனாதை பெண்களிடம் உங்களால் நியாயமான முறையில் நடந்து கொள்ள முடியாது என நீங்கள் பயந்தால், உங்களின் மனைவி சம்மதத்தோடு இருவரையோ அல்லது மூவரையோ அல்லது நால்வரையோ திருமணம் செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்களால் நியாயமாக நடந்து கொள்ள முடியாது என்றால் உங்கள் வலது கை ஆட்கொள்ளும் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுங்கள். இதனால் நீதிக்கு புறம்பாக நீங்கள் நடக்க மாட்டீர்கள்.”