உதட்டின் நிறத்தை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று அறியலாம்!

நம் உதட்டின் நிறத்தை வைத்தே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

உதடு பிரகாசமாக நல்ல சிவப்பாக இருந்தால்

நல்ல சிவப்பாக உதடு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அப்படி இருந்தால் நம் உடல் உஷ்ணமாக இருப்பதாக அர்த்தம்.

அப்படி இருந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்? – செவ்வந்தி பூ கலந்த தேனீர், கசப்பான முலாம் பழம் போன்றவறை சாப்பிடலாம்.

உதடு மங்கலான இளம் சிவப்பு, வெள்ளை, சாம்பல் நிறத்தில் இருந்தால்

இப்படி இருந்தால் நமக்கு இரத்த சோகை பிரச்சனை இருப்பதாக அர்த்தம். நம் உடலானது அதிக குளிர்ச்சியுடன் இருப்பதாகவும் குருதிசோகை குறைவாக இருப்பதாகவும் அர்த்தமாகும்.

என்ன செய்ய வேண்டும்?- நல்ல சூடான உணவை உண்ண வேண்டும் மற்றும் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து கொண்ட உணவுகளான பேரிச்சம்பழம், சிவப்பு இறைச்சிகளை அதிகம் சாப்பிடலாம்.

உதடு நல்ல சிவப்பிலிருந்து கருப்பாக இருந்தால்

இப்படி இருந்தால் நம் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?- நல்ல சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தலாம், நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தலாம்.

உதடு நல்ல சிவப்பாகவும் ஊதா நிற கோட்டுடன் இருந்தால்

இப்படி இருந்தால் நம் உடல் சம நிலையில் இல்லை என அர்த்தம். சில சமயம் சூடாகவும், சில சமயம் குளிர்ச்சியாகவும் நமது உடல் இருக்கிறது என அர்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?- உருளைகிழங்கு, கேரட், மீன்கள் அதிகம் உண்ணலாம். பதப்படுத்தப்பட்ட, காரமான உணவுகளை தவிர்ப்பது நலம்

இயற்கையான இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால்

இப்படி இருந்தால் நம் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும்.