செயற்கை கண் இமை பயன்படுத்துவது சரியா?

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்று தான் அனைவரும் கூறுவோம்.

அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இரு ந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும்.

இன்று நவநாகரீக பெண்கள் மத்தியில் செயற்கை இமை பிரபலம். சினிமா, கம்ப்யூட்டர், டி.வி… என கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை தருவதால், கண்கள் பாதிக்கப்பட்டு, இமைகளும் உதிர்ந்து கண்கள் ஜீவனற்றுக் காணப்படுகின்றன.

அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

எல்லாமே செயற்கைக்கு மாறிவிட்ட நிலையில், கண்களில் செயற்கையாகப் பொருத்திக் கொள்ளும் இமைகளும் விற்பனைக்கு வந்துவிட்டன.

இதனை, நடிகைகள், மாடலிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமே செயற்கை இமை பொருத்தி வந்த காலம் மாறி, தற்போது கல்லூரி பெண்களிடமும் செயற்கை இமை பிரபலமாகி இருக்கிறது.

இந்த செயற்கை இமையானது குறைந்த விலீயான 50 ரூபாயில் தொடங்கி தரத்துக்கு ஏற்ற விலையில் கிடைக்கப் பெறுகின்றன.

  • கண்களின் மேல் பகுதியில் ஒட்டிக்கொள்வதற்கு இமையிலேயே பசை இருக்கும்.
  • செயற்கை இமைகள் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கண்களைச் சுத்தமான வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • தூங்கும்போது கண்களைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவிக்கொள்வது நல்லது.
  • கண்களின் ரப்பை பகுதியில் செயற்கை இமைகளை ஒட்டுவதால், கண் நலம் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், கண் அலர்ஜி, சரும அலர்ஜி பாதிப்பு இருப்பவர்கள் இவற்றைப் பயன்படுத்தினால் அரிப்பு, சிவந்து போதல், தடிப்பு, வீக்கம் ஏற்படலாம்.
  • செயற்கை இமைகளில் இருக்கும் பசையினால் ஒவ்வாமை ஏற்பட்டால் கண்களில் நீர் வடியலாம். சமயங்களில் கண்களைக் கசக்கும்போது இயற்கையாக இருக்கும் இமையும் உதிரும். தரமான செயற்கை இமைகள், அதற்கான பிரத்யேக மற்றும் தரம் கொண்ட பசை ஆகியவற்றைப் பயன்படுத்துவதே நல்லது.