லேசரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டர்!!

சற்று முன்னர் சிரியாவில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட, ரஷ்ய ஹெலிகொப்டரை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளார்கள்.

தமது தாக்குதல் வானூர்தி ஒன்று தளம் திரும்பவில்லை என்பதனை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

கைடட் மிசைல் என்று அழைக்கப்படும். குறி தவறாமல் சென்று இலக்கை தாக்க வல்ல ஏவுகணை கொண்டே ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்று ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.

ஒரு முறை லேசர் வெளிச்சத்தை ஒரு பொருள் மீது பாச்சிவிட்டு, பின்னர் குறித்த ஏவுகணையை ஏவினால்.

அது லேசர் வெளிச்சம் பாய்ந்த அந்தப் பொருளை தேடிச் சென்று தாக்க வல்லதாகும்.

எனவே பறக்கும் ஹெலிகொப்டர் மீது இதனை இலகுவாக ஏவி சுட்டு வீழ்த்த முடியும்.