இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை என களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன தொடர்பு பீடத்தின் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமத்திய மாகாண ஆசிரியர்களுக்காக நடத்தபபட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

செய்திகளை விற்பனை செய்வதே ஊடகங்களின் நோக்கமாக அமைந்துள்ளது. 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் ஓர் குற்றவாளியாக ஊடகங்களையும் குறிப்பிட வேண்டும்.

விருதுகளுக்காகவும் விற்பனை நோக்கிலும் செயற்படும் ஊடகவியலாளர்களினால் நட்டுக்கு பயனில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்பக்கூடிய ஊடக கலாச்சாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.