கோலட்சுமி என்று பசுக்களை அழைக்க காரணம்

பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) லட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர்.

கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.

பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது.

வீட்டில் செல்வம் பெருக கோமாதா பூஜை, கஜ பூஜை செய்யலாம்.