கேள்வி கேட்ட பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிஸ்! என்ன நடந்தது?

பேட்டி எடுத்து கொண்டிருந்த ஒரு பெண் பத்திரிக்கை நிருபரை பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள டகோடா மாகாணத்தில் Dakota Access Pipeline என்னும் அரசு செயல்படுத்தவுள்ள திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல நேற்றும் அங்கு போராட்டம் நடைபெற்று வந்தது. அதை படம்பிடிக்கவும், அது பற்றிய செய்தியை சேகரிக்கவும் பல பத்திரிக்கையை சேர்ந்த நிருபர்கள் அங்கு கூடியிருந்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் Erin Schrode என்னும் பெண் நிருபர் பேட்டி எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி ரப்பர் குண்டு அடக்கிய துப்பாக்கியை கொண்டு Erinய சுட்டார். இதில் நிலைதடுமாறி கத்தி கொண்டே அவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த Erin இது பற்றி கூறுகையில், அந்த இடத்தில் போராட்டம் அமைதியான முறையில் தான் நடைபெற்று வந்தது. பின்னர் எதற்கு பொலிசார் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு பத்திரிக்கையாளரான என்னை அவர் சுட்டது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.