இலஞ்ச ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தால் தயக்கமின்றி செல்வேன் – பிரதமர்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர சம்பவம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி செய்துள்ள முறைப்பாடுக்கு அமைய வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஆணைக்குழு கோரினால், எந்த தயக்கமும் இன்றி பதிலளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிணை முறிப்பத்திர சம்பவம் உலகத்திலேயே மிகப் பெரிய கொள்ளை எனக் கூறி, கூட்டு எதிர்க்கட்சியினர் தமது நிர்வாணத்தை மறைக்க கோஷமிட்டு வருகின்றனர்.

ராஜபக்ஸ அரசாங்கம், பிணை முறிப்பத்திர சம்பவங்கள் தொடர்பில் நடந்து கொண்ட விதம் மற்றும் பிணை முறப்பத்திர சம்பவம் தொடர்பாக பேசும் அனைவரும் கடந்த காலத்தில் சட்டம் அமுல்படுத்தமை குறித்து மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.