நடிகர் கமலுக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம் புற்றுநோயாம்?அதிர்ச்சியில் நடிகர் கமல்!!

உலகநாயகன் கமல்ஹாசன் சாதனைக்கு பஞ்சமில்லாதவர். அதேபோல் படங்கள் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சையில் எப்போதும் சிக்குபவர்.

கடந்த மூன்று நாட்களாக கௌதமியுடனான இவரது பிரிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இவருக்கு நெருக்கமாக இருந்த 9 பேர் வரை புற்றுநோயால் இருந்ததாக ஒரு செய்தி உலா வருகிறது.

கமலின் நெருங்கிய நண்பரும் அற்புதமான பாடகருமான சாகுல் ஹமீது புற்றுநோய் தாக்கி இறந்து போனார். கமல் இரண்டு நாட்கள் கதறி அழுதார்.

அதன் பின் கமல் நெருங்கிய நண்பர் சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மா புற்றுநோய் வந்து இறந்தார்.
கமலின் இன்னொரு நண்பரும் சக நடிகருமான ஜெய்கணேஷ் புற்றுநோய் வந்து இறந்தார்.
ரயில் பயணங்கள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ஜோதி. கமலின் தூரத்து உறவாம்.. அவருக்கும் புற்று நோய்..இறந்து போனார்.

ஒரு காலத்தில் கமல் காதலித்த நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் வந்து கேரளா போய் முடங்கிவிட்டார். அதிர்ந்து போய் ஓடிசென்று பார்த்த கமல் முடியெல்லாம் கொட்டி எலும்பும் தோலுமாக கிடந்த ஸ்ரீ வித்யாவை கட்டி அணைத்து மணிகணக்கில் கதறினார்.

இப்படி நீண்ட லிஸ்டில் கடைசியாய் நடிகை கௌதமிக்கும் மார்பகப் புற்று நோய். ஒரு பக்க மார்பை நீக்கினார்கள். அவரையும் கமல் தான் காப்பாற்றினார்.

இப்படி ஒரு ஒற்றுமை எப்படி இயற்கையாக நடந்தது என்பது அதிர்ச்சியாகவே உள்ளது.