இந்த 2 நிமிட வீடியோவை பார்த்தால், இனி மேல் நீங்க பட்ஸ் யூஸ் பண்ணவே மாட்டீங்க!

காது குடைவது யாருக்கு தான் பிடிக்காது. 99% அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது காது குடைந்து விடுவார்கள். அது தரும் சுகமே தனி. ஆனால், காதை உட்புறத்தில் சுத்தம் செய்வது தவறென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், காதில் இருந்து நாம் அழுக்கு என எண்ணி சுத்தம் செய்யும் மெழுகு போன்ற பொருள் தான் காதின் ஆரோக்கியத்தை காக்கும் பொருளாகும். முக்கியமாக பட்ஸ், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி என எதையும் காது குடைய பயன்படுத்த வேண்டாம்…
சுகானுபவம்!

காது குடைவது என்பது நம்மில் பலருக்கு ஒரு சுகானுபவம் தான். அது ஹேர் பின்னாக இருக்கட்டும், கருவேப்பிலை குச்சியாக இருக்கட்டும், பட்ஸாக இருக்கட்டும். அது தரும் சுகமே தனி. இதற்காகவே சிலர் குளித்து முடித்து வந்தவுடன், அழுக்கை அகற்றுகிறேன் என காது குடைய ஆரம்பித்துவிடுவார்கள்.

மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆனால், மருத்துவர்களோ, நமது காதுகளையும், அதன் மென்மையான உள் பாகங்களையும் பாதுகாப்பதே அந்த மெழுகு போன்ற ஒன்று தான். அது அழுக்கு அல்ல. எனவே, காதை உட்புறமாக குடைய வேண்டாம் என்கின்றனர். அதற்கு மாறாக, வெளிப்புற காதை மட்டும் சுத்தம் செய்துக் கொள்ளலாம்.

பட்ஸ் ஏன் கூடாது…

இந்தியாவை சேர்ந்த ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது, அவரது காதுக்குள் பஞ்சு அடைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதை அவர் கருவிகள் கொண்டு தான் அகற்றினார்.

மற்றவை….

பஞ்சுக்கே இப்படி என்றால், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி போன்றவை மென்மையான, சென்சிடிவான காதின் உள் பகுதிகளை காயங்கள் உண்டாக காரணமாகிவிடும். எனவே, காதின் உட்பகுதியை சுத்தம் செய்வதை தவிர்த்து விடுங்கள். அது தான் காதுக்கும் நல்லது. மற்றபடி, அழற்சி பல தெரிந்தால், மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

காணொளிப்பதிவு!

ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது எடுத்த காணொளிப்பதிவு…